உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு பதக்கம்

இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு பதக்கம்

திருப்பூர்,; கடந்த 2023- 24ம் ஆண்டில் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பான செயல்பாடுக்காக மாநிலத்தில் தேர்வான 15 இன்ஸ்பெக்டர்களில், பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரும் ஒருவர். இவரை பாராட்டி துணை முதல்வர் உதயநிதி, பாராட்டு சான்றிதழ், மெடல் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு புலன் விசாரணை பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாநிலம் முழுதும் 10 இன்ஸ்பெக்டர்கள் தேர்வாயினர். திருப்பூர் மாநகரில் வடக்கு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ