நொய்யல் பாதுகாக்க சிறப்பு திட்டம் அவசியம்
திருப்பூர்; ''நொய்யல் நதியைப் பாதுகாக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்'' என்று விவசாயிகள் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட நொய்யல் படுகை விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், சாக்கடை கழிவை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். பல்வகை திடக்கழிவுகளை ஆற்றில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மங்கலம் நால்ரோட்டில் இருந்து அவிநாசி செல்லும் ரோட்டில், நொய்யல் கரையோரம், பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியுடன், நேற்று ஆர்ப்பாட்டம் துவங்கியது. விவசாயிகள், மாடுகள் மற்றும் கன்றுகளுடன் போராட்டத்துக்கு வந்திருந்தனர்.போராட்டத்துக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். மங்கலம், ஜெயம் அறக்கட்டளை தலைவர் மகேந்திரகுமார், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உட்பட, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர். தமிழக அரசு சிறப்பு திட்டம் தயாரித்து, நொய்யல் ஆறு முழுவதையும் மீட்டெடுக்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டது. கொள்கை முடிவு தேவை
சம்பத்குமார், ஒருங்கிணைப்பாளர், கிராமிய மக்கள் இயக்கம்: நொய்யல் ஆற்றில், அசுத்தமான தண்ணீர் பாய்கிறது. பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலக்கிறது. சிலரது சுயலாபத்துக்காக, மழை காலங்களில், சாயக்கழிவு திறந்துவிடப்படுகிறது. வீட்டு கழிவுகளும் ஆபத்தாக மாறியுள்ளது.மாநகராட்சி திட்டமிட்டுள்ளது போல், சாக்கடை கழிவை சுத்திகரித்து, ஆற்றில் விட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். நொய்யல் நதியை பாதுகாக்க, தமிழக முதல்வர் முன்வர வேண்டும். காப்பது அரசின் கடமை
சதீஷ், ஒருங்கிணைப் பாளர், களம் அறக்கட்டளை: நொய்யலை மீட்டு உண்ணாவிரதம் நடத்தக்கூட, கொடுத்த அனுமதியை மறுத்துள்ளது புதிராக இருக்கிறது.நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்யக்கோரி போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது நீர்நிலைகளை நாம் பாதுகாத்து வைக்காவிட்டால், எதிர்கால சந்ததியினருக்கு நீராதாரம் இல்லாமல் போய் விடும்; தமிழக அரசே சிறப்பு திட்டம் தயாரித்து, நொய்யலை பாதுகாக்க வேண்டும்.நொய்யல் வாழ்வா தாரம் அளித்து வந்த பழைய நிலையை மீட் டெடுக்க வேண்டும்.