உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ காமதேனுவுக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீ காமதேனுவுக்கு சிறப்பு பூஜை

உடுமலை : உடுமலை செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், பங்குனி பவுர்ணமியையொட்டி, ஸ்ரீ காமதேனுவுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.பாற்கடலை, அமிர்தம் வேண்டி கடைந்த போது, கற்பக விருட்சம், காமதேனு, மகாலட்சுமி, போன்ற திவ்ய ஐஸ்வர்யங்கள், பங்குனி பவுர்ணமி தினத்தன்று தோன்றியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.இத்தகைய நாளையொட்டி செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஸ்ரீ காமதேனுவுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.விழாவுக்கான ஏற்பாடுகளை, பானலிங்கேஸ்வரர் கோவில் நிறுவனர் மாணிக்கவாசகம் செய்திருந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ