உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விடுமுறையில் நுாலகங்களில் சிறப்பு நிகழ்ச்சி: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

விடுமுறையில் நுாலகங்களில் சிறப்பு நிகழ்ச்சி: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

உடுமலை; முழு ஆண்டு விடுமுறையையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி நுாலகங்களில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.தற்போது அரசு, அரசு உதவி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. மற்ற பள்ளிகளுக்கும் ஏப்., இறுதிக்குள் முழு ஆண்டு தேர்வு நிறைவடைகிறது.ஒரு மாதம் விடுமுறை விடப்பட உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றுவதற்கு, நுாலகத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும், சிறந்த வாசிப்புத்திறன் பெறுவதற்கும், சமூக அனுபவம் கற்றுக்கொள்வதற்கும் நுாலகம் சிறந்த இடமாக உள்ளது.நுாலகங்களில் பள்ளி மாணவர்களுக்கென போட்டிகள், சிறிய நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்பு போன்ற செயல்பாடுகள் வழங்கப்பட்டன. தற்போது மிக சில நுாலகங்களில் மட்டுமே இத்தகைய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால், மாணவர்களுக்கு நுாலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென, பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களுக்கு நுாலகத்தை பயன்படுத்துவதற்கு பள்ளிகளிலும் சிறு பயணங்கள் அழைத்துச்செல்கிறோம். ஆனால் நுாலகங்களில் சிறிய நிகழ்ச்சிகள் நடத்தும் போதும், போட்டிகள் வைக்கும் போதும், அவர்களுக்கு நுாலகத்தின் மீதான ஆர்வம் சுயமாக ஏற்படும்.விடுமுறையில் மாணவர்களுக்கு, இவ்வாறு நடத்துவதற்கு நுாலகத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி