மேலும் செய்திகள்
இன்றும் - நாளையும் சிறப்பு ரயில் இயக்கம்
12-Apr-2025
பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க வெள்ளிதோறும் எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு, 11:00 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06085) வரும், 28ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை, 3:30 மணிக்கு பாட்னா சென்று சேரும். திருப்பூருக்கு இந்த ரயில், சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு வரும். மே, 30ம் தேதி வரை இந்த ரயில் வெள்ளிதோறும் இயங்கும்.மறுமார்க்கமாக, பாட்னாவில் இருந்து திங்கட்கிழமை (28ம் தேதி) இரவு, 11:45 மணிக்கு புறப்படும் ரயில், வியாழன் காலை, 10:00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். ஜூன், 2ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயங்கும். திருப்பூரை இந்த ரயில் வியாழன் அதிகாலை 2:30 மணிக்கு கடந்து செல்லும்.
12-Apr-2025