உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பீஹாரில் ஓட்டளித்தவர்கள் உடனே திரும்ப சிறப்பு ரயில்

பீஹாரில் ஓட்டளித்தவர்கள் உடனே திரும்ப சிறப்பு ரயில்

திருப்பூர்: பீஹார் மாநிலம், 243 சட்டசபைகளை கொண்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளுக்கு, கடந்த, 6ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும், 11ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் முடிந்த கையோடு பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழகம் திரும்ப ஏதுவாக, அம்மாநிலம் பரூனியில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் (எண்:05263) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 11 மற்றும், 12ம் தேதி இரவு, 8:30 மணிக்கு புறப்படும் ரயில், 14 மற்றும், 15ம் தேதி காலை, 6:00 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது. திருப்பூர் ஸ்டேஷனுக்கு இரவு, 10:15 மணிக்கு இந்தரயில் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி