கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு
- நிருபர் குழு -சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி தினமான நேற்று, உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.உடுமலை பிரசன்ன விநாயகர், குட்டைத்திடல் சித்தி புத்தி விநாயகர் கோவில், ருத்ரப்பநகர் சித்தி விநாயகர் கோவில், காந்தி நகர் வரசித்தி விநாயகர் கோவில் என சுற்றுப்பகுதியிலுள்ள விநாயகர் கோவில்களில், சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் என பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.சித்தி புத்தி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* உடுமலை அருகே சின்னபொம்மன்சாளை கிராமத்தில், செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.* உடுமலை ஜி.டி.வி., லே அவுட் செல்வவிநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தை மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று மாலை, 5:30 மணிக்கு சிறப்பு அபிேஷக, சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது. பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாளான நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.