உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாண்டுரங்கன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு

பாண்டுரங்கன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திருப்பூர்,; திருப்பூர், ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.ராயபுரம், ராஜ விநாயகர் கோவில் வளாகத்தில் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி சன்னதி உள்ளது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீபாண்டுரங்கன் - ருக்மாயி திருக்கல்யாணம் மற்றும் சத்ய நாராயண பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை, ஹோம பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து சிறப்பு அபிேஷகமும், திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது.சத்ய நாராயண பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தன. அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. திரளானோர் வழிபட்டனர். சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோவில் சேவா டிரஸ்ட், மாவட்ட பாஷ்வார் ஷத்ரிய சங்கம், மாவட்ட மகிளா மண்டலி மற்றும் யுவா சமாஜம் ஆகிய அமைப்புகள் செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ