உள்ளூர் செய்திகள்

ஆன்மிக பேருரை

உடுமலை; உடுமலையில், ஆடிக்கிருத்திகையையொட்டி, ஆன்மிக பேருரை நிகழ்ச்சி நடக்கிறது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், வரும் 20ம் தேதி மாலை, 7:00 மணிக்கு ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது.இந்நிகழ்ச்சியில், 'அண்ணாமலையானைப் பாடுதுங்கான் அம்மானாய்' என்ற தலைப்பில், ஜெய்சிங் லிங்கவாசகம் ஆன்மிக பேருரை நிகழ்த்துகிறார். இதில் ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி