உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

உடுமலை; உடுமலை அருகே குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. இப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் ஆறு, எட்டு, பத்து மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடந்தது. ஓட்டப்பந்தயம், டென்னிஸ் பந்து எறிதல், மட்டைபந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி அகாடமி இயக்குனர் பானுமதி, முதல் பரிசாக மூவாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை