விளையாட்டு விழா மாணவர்கள் உற்சாகம்
அவிநாசி: அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள சாந்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த சார்லஸ், பள்ளியில் 'இன்ட்ராக்ட்' கிளப் துவக்கி வைத்து, அதன் நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உதவி போலீஸ் கமிஷனர் சேகர், விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.