ஸ்ரீஆதிமுத்து மாரியம்மன் கோவில்
திருப்பூர் ; திருமுருகன் பூண்டி, ஸ்ரீ ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 45ம் ஆண்டு பொங்கல் குண்டம் திருவிழா நடைபெற்றது.நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.