உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 64 குல மக்களுக்கு குலதெய்வமாக அருளும் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

64 குல மக்களுக்கு குலதெய்வமாக அருளும் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர், ; பல்வேறு சமூகங்களை சேர்ந்த, 64 குல மக்களுக்கு குலதெய்வமாக இருந்து அருள்பாலித்து வரும், முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது.அனைத்து மக்களுக்கும் அன்னையாக இருந்து காத்து வரும் முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன், 64 குல மக்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து அருள்பாலிக்கிறாள். அம்மனை தேடி வந்த மக்கள் நோய்நீங்கி குணமாகியுள்ளனர்; கஷ்டங்கள் நீங்கி மனநிறைவு பெற்றுள்ளனர். கண்ணொளி பெற்ற பக்தர்களும் அனேகம் உள்ளனர். அதிஅற்புதங்கள் நிறைந்த அங்காளம்மனுக்கு, கொங்கு பாண்டியர்கள், திருப்பணி செய்துள்ளதை, கோவில் கற்சுவரில் துள்ளும் மீன் சின்னங்களால் அறிய முடிகிறது.பல நுாறு ஆண்டுகளுக்கு பின், 2005 ஜூன் 17ல், கும்பாபிேஷகம் நடந்தது. அதற்கு பின், தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பிரவேச பணிகள் துவங்கியது. நேற்று முன்தினம் முளைப்பாலிகை ஊர்வலமும் மிகப்பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, யாகசாலை வேள்வி பூஜைகள் துவங்கின. சிவாச்சாரியார்கள், விநாயகர் வழிபாட்டுடன் அக்னியை வரவழைத்து, யாகசாலை பூஜைகளை துவக்கினர்.ஸ்ரீஅங்காளம்மன், பரிவார தெய்வங்களுக்கான கலசங்கள், புனித தீர்த்தத்துடன் யாகசாலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன. திருமுறை பாராயணம், அம்மன் பாடல்களை சமர்ப்பித்தும், மூலிகைகளை யாகத்தில் சமர்ப்பித்தும் வழிபட்டனர். நிறைவாக, பட்டுச்சேலை, பழவகைகள் மற்றும் பிற பொருட்களை சமர்ப்பித்து, நிறைவேள்வி பூஜைகளை செய்து சமர்ப்பித்தனர்.கோவில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் திருப்பணி குழுவினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வரும், 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு கோபுரம் மற்றும் கருவறை விமானங்களுக்கு கலசம் பொருத்தப்படும். வரும், 6ம் தேதி அதிகாலை, ஆறாம்கால பூஜையை தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கும், 6:00 மணிக்கு, அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, அன்னதானம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை