உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ அய்யப்ப சரிதம்; மாணவியர் தத்ரூபம்

ஸ்ரீ அய்யப்ப சரிதம்; மாணவியர் தத்ரூபம்

திருப்பூர்; சாய் கிருஷ்ணா நுண்கலை கூடம் குழுவினரினர், அய்யப்பனின் வரலாற்றை, பரதநாட்டியம் மூலம் தத்ரூபமாக நடித்துக்காட்டினர்.திருப்பூர், காலேஜ் ரோட்டிள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம், நாளைமறுநாள், காலை, 6:10 மணி முதல் 7:10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா பூர்வாங்க பூஜைகள், கடந்த 27ல் துவங்கி நடைபெற்றுவருகின்றன.மூன்றாவது நாளான நேற்று காலை, 5:30 மணி முதல், கணபதிஹோமம், உஷா பூஜா, அங்கூர பூஜை, மரப்பாணி, ஹோம கலச அபிஷேகம், உச்ச பூஜைகள் நடைபெற்றன. மாலை, 5:30 மணிக்கு, அங்கூர பூஜை, குண்ட சுத்தி, அஸ்த்ர கலச பூஜை, ஆதிவாச ஹோமத்தை தொடர்ந்து அத்தாழ பூஜை நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவின் ஒருபகுதியாக, அய்யப்பன் கோவில் மண்டப மேடையில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் நேற்று மாலை, 6:30 மணிக்கு சாய் கிருஷ்ணா நுண்கலை கூடம் குழுவினரின் 'ஸ்ரீ அய்யப்ப சரிதம்' பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.அய்யப்பனின் பிறப்பு, புலிப்பால் கொண்டுவந்தது, தேவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்த மஷியை வென்றது,18 படிகளுடன் அய்யப்பனுக்கு கோவில் கட்டப்பட்டது; ஜோதி வடிவாக அய்யப்பன் காட்சிஅளித்து ஆகியவற்றை, மாணவியர் தத்ரூபமாக அபிநயம் பிடித்து, பரதநாட்டியத்தில் வெளிப்படுத்தினர்.இன்று, மாலை, பவளக்கொடி கும்மி; வரும் 1ம் தேதி, 'இறைவன் அருளைப்பெற வழிகாட்ட வல்லது பக்தியா, தொண்டா' என்கிற தலைப்பில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை