மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்
05-Sep-2025
திருப்பூர்; திருப்பூர், போயம்பாளையம் பிரிவு, பழனிசாமி நகர் 4வது வீதியில், ஸ்ரீகருப்பராய சுவாமி, சப்தகன்னிமார், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது. கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது; கோபூஜை, மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. காலை மற்றும். மாலையில், யாகசாலை வேள்வி பூஜைகள் நடந்தன. கடந்த, 7ம் தேதி அதிகாலை, இரண்டாம்கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:45 மணி முதல், 9:25 மணிக்குள், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீகருப்பராயசுவாமி, ஸ்ரீகன்னிமார் சுவாமி, ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீதன்னாசியப்பன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. மகா அபிேஷகம், அலங்கார பூஜையை தொடர்ந்து, ரா.ர., திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
05-Sep-2025