ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
திருப்பூர், ; திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டாங்காடு, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 6ம் தேதி துவங்கியது.தொடர்ந்து திருவிளக்கு பூஜை, பவளக்கொடி கும்மி நிகழ்ச்சி, மகா கணபதி ேஹாமம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி அடுத்தடுத்த நாட்கள் நடந்தது. 10ம் தேதி இரவு பூச்சாட்டுதல் பூஜை, பொரிமாற்றுதல் நடந்தது. வாணவேடிக்கையுடன் பூ கம்பம் நடப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர். நேற்று மாலை பூவோடு ஊர்வலம் நடந்தது. இன்று மாரியம்மன் அழைத்தல், பரிவட்டம் நடக்கிறது நாளை மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும், 15ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மதியம் அன்னதானத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.