ஸ்ரீசத்ய சாய் நிறுவனங்களின் பார்வை அளிக்கும் சேவை
திருப்பூர்; ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் உள்ள, ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது. 282 பேர் பங்கேற்றனர்.கண் பாதுகாப்பு மற்றும் கண் பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மொத்தம், 60 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 108 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் கண் மருத்துவ முகாம் நடத்தப்படும்; ஆக., மாத முகாம், 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.