உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் 15ம் தேதி கும்பாபிேஷகம்

ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் 15ம் தேதி கும்பாபிேஷகம்

திருப்பூர், வாலிபாளையம், யுனிவர்சல் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம், வரும் 15ம் தேதி நடக்கிறது.திருப்பூர், வாலிபாளையம், யுனிவர்சல் தியேட்டர் ரோட்டிலுள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் அருகே, புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துவாரகமாயி துனி, தியான மண்டபத்துடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிேஷக விழா ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. வரும், 12ம் தேதி முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம், பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது. மாலையில், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியரின் பரதநாட்டியம் இடம்பெறுகிறது.வரும் 13ல் விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி குழுவினரின் பஜனை, ஸ்ரீசத்ய நாராயண பூஜை நடக்கிறது. வரும் 14ம் தேதி முத்தமிழ் ராகங்கள் இன்னிசை நிகழ்ச்சி; 15ம் தேதி காலை, 6:15 முதல் 6:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.தொடர்ந்து, அருள் அக்னி பிரதிஷ்டை பூஜை, தசதரிசனம், காலை, 8:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீசாய் மகான் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, ஸ்ரீசீரடி சாய் பீட அறங்காவலர் குழு, சேவையாளர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை