உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில கலைத்திருவிழா: 2,080 மாணவர் பங்கேற்பு

மாநில கலைத்திருவிழா: 2,080 மாணவர் பங்கேற்பு

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில கலைத்திருவிழா, காங்கயம், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.காங்கயம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் சேர்மன் ராமலிங்கம் வரவேற்றார். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், ஈரோடுஎம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் சாமிநாதன், கயல்வழி பங்கேற்றனர்.மாநிலம் முழுதும், 38 மாவட்டங்களில் இருந்து, 1,050 அரசு பள்ளி மாணவர்கள், 1,030 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் என, 2,080 பேர், 11 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 1.26 லட்சம் மாணவர்கள் பள்ளி அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்று, 12 ஆயிரம் பேர் வட்டார அளவிலான கலைத்திருவிழாவுக்கு தேர்வாகி, அவர்களில், 2,671 மாநில போட்டியில் பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற மையக்கருத்தினை அடிப்படையாக கொண்டு மாணவ, மாணவியர் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிமுத்து, தேவராஜன், பழனி, அருள்ஜோதி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி