உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில குத்துச்சண்டை போட்டி; திருப்பூர் மாணவர்கள் அபாரம்

மாநில குத்துச்சண்டை போட்டி; திருப்பூர் மாணவர்கள் அபாரம்

திருப்பூர்; தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தது.போட்டியில், 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிக்காட்டினர். இப்போட்டியில், திருப்பூர் கோல்டன் கிளவ் பாக்ஸிங் கிளப் சார்பில் பங்கேற்ற கிஷ்வந்த் மற்றும் தீப்தி முதலிடம் பெற்று, தங்கம் வென்றனர். சம்ரிதா, இரண்டாமிடம் பெற்று, வெள்ளி வென்றார்.போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர், பயிற்சி வழங்கிய அஸ்வின் ஆகியோரை, ஏ.வி.பி., கல்விக்குழும தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி, துணைத்தலைவர் லோகநாதன், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ