மாநில கால்பந்து போட்டி; மாவட்ட அணி தேர்வு
திருப்பூர்; திண்டுக்கல்லில் மாநில கால்பந்து போட்டி வரும், 18ல் துவங்கி 21ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு, கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் நேற்று துவங்கியது. 2010 மற்றும் 2011ம் ஆண்டு பிறந்த, 16 வயதுக்கு உட்பட்ட மாணவியர் அணித் தேர்வில் மாவட்ட முழுதும் இருந்து, 61 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட கால்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் போட்டிகளையும், அணித்தேர்வையும் துவக்கி வைத்தனர். மூன்று சுற்று முடிவுகளில், 18 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த அணியினர் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் பங்கேற்கின்றனர். ஜூன் மாத இறுதியில் விருதுநகரில் மாணவர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு, நாளை (15ம் தேதி) நடக்கிறது.