உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில கபடி போட்டி துவக்கம்

மாநில கபடி போட்டி துவக்கம்

பல்லடம் : பி.ஜி., கபடி விளையாட்டு கழகம், பல்லடம் தமிழ்ச்சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு தொடர் கபடி போட்டி, பல்லடம் மணிவேல் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.தமிழ்ச்சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திர குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். நண்பர்கள் கால்பந்து குழு செயலாளர் திருமூர்த்தி வரவேற்றார்.கோவை, திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, பழனி, விருதுநகர், பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 78 அணிகள் பங்கேற்றன. மொத்தம் நான்கு சுற்றுகளாக போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகளை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை