மேலும் செய்திகள்
மாநில சதுரங்க போட்டி தருண், தனிஷ் அபாரம்
22-Apr-2025
திருப்பூர்; மாநில அளவிலான டென்னிஸ் போட்டி, திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள தி திருப்பூர் கிளப் மைதானத்தில், கடந்த 2ல் துவங்கி நடைபெற்றது. திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 300 பேர் பங்கேற்று மோதினர்.இறுதிச்சுற்று போட்டிகள் நேற்றுமுன்தினம் இரவு நடந்தன. எட்டு வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், கரூரை சேர்ந்த மித்ரா; 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவை ஆதியோகி முதலிடம்; 10 வயது பிரிவில் கரூரை சேர்ந்த நிக்கில் சாய் வெற்றிபெற்றனர்.12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவை கபிலயாயதி; 14 வயது பிரிவில் நாமக்கல் கணேஷ்ராகவ்; 16 வயது பிரிவில் சேலம் பிரபாகரன்; 16 வயது பெண்கள் பிரிவில் கோவை தியா ஆகியோர் வெற்றிபெற்றனர்.வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, பரிசு கோப்பை, ரொக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. தி திருப்பூர் கிளப் தலைவர் சுகுமாரன், செயலாளர் சண்முகம், நடராஜ் செட்டியார் சன்ஸ் ஜூவல்லரி விஜயராகவன், சோனி ெசன்டர் வெங்கடாசலம் ஆகியோர், வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
22-Apr-2025