உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்பாடில்லாமல் வீணாகும் உணவு தானிய கிடங்கு; குடி மகன்களின் கூடாரமாகிறது

பயன்பாடில்லாமல் வீணாகும் உணவு தானிய கிடங்கு; குடி மகன்களின் கூடாரமாகிறது

உடுமலை : கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட உணவு தானிய கிடங்கு கட்டடம் பயன்பாடில்லாமல் 'குடிமகன்'களுக்கான இடமாக மாறியுள்ளது.உடுமலை ஒன்றியம் கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில், உணவு தானிய கிடங்கு கட்டடம் 2014 - 15ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.எஸ்.வி., புரத்திலிருந்து கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்கு செல்லும் வழியில் இருக்கும் இக்கட்டடம், எந்த பயன்பாடும் இல்லாமல் பொலிவுடன் உள்ளது. பல மாதங்களாக பூட்டிய நிலையில் இருக்கும் இக்கட்டடம் 'குடி'மகன்களுக்கான இடமாகவும் மாறிவிட்டது.மாலை நேரங்களில் இந்த கட்டடத்தின் வளாகத்தில் பலரும் மது அருந்திவிட்டு இளைப்பாறுகின்றனர். இதனால் அந்நேரங்களில் அவ்வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.சில நாட்களில் காலை நேரங்களிலும் 'குடி'மகன்கள் இந்த கட்டடத்தின் முன்பு அமர்ந்துகொள்கின்றனர்.எந்த பயன்பாடும் இல்லாமல், சுற்றுசுவர் அமைக்கப்படாமல் பாதுகாப்பில்லாத கட்டடத்தை சுற்றிலும் திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாறிவிட்டது.உணவு தானிய கிடங்கு பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு, எந்த பயன்பாடும் இல்லாமல் வீணாக உள்ளது.பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்டு, தற்போது காட்சிப்பொருளாகவும், 'குடி'மகன்களுக்கு பயன்படும் இடமாகவும் மட்டுமே இக்கட்டடம் உள்ளது.கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவருதற்கும் அல்லது பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான இடமாக மாற்றுவதற்கும், ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்டடம் பயன்பாடில்லாமல் இருப்பது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தில் விசாரிக்கப்படும் என, ஒன்றிய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை