உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளம் ஆன வீதிகள்; மக்கள் அவதி

குளம் ஆன வீதிகள்; மக்கள் அவதி

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, மகாவிஷ்ணு அவென்யூ பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகளில், பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்குச் செல்லும் பிரதான வழித்தடம் உட்பட, வீதிகளில் அவ்வப்போது மழைநீர் தேங்கி வருகிறது. சமீப நாட்களாக, தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக, வழித்தடமும், வீதிகளும் குளமாக மாறியதால், இங்குள்ள குடியிருப்பினர் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியினர் கூறியதாவது: சில வீதிகள் குண்டும், குழியுமாக இருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. தீபாவளி பண்டிகையை கூட நன்றாக கொண்டாட முடியல்லை. தேங்கி நிற்கும் தண்ணீரால், வீதிகளில் விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. வீதிகளை சீரமைத்து ரோடு மற்றும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மழைநீர் தேங்காத வகையில், வீதிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை