அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
உடுமலை; அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மார்ச் முதல் துவங்கியுள்ளது. இருப்பினும், பள்ளிகளில் ஆண்டு விழா, மூன்றாம் பருவத்தேர்வுகள் நடந்ததால் சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.ஆண்டு விழாக்களில் சேர்க்கை குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பணிகள் நடக்கிறது.உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில் பள்ளிகளில் தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கை, அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டு நோட்டீஸ் தயாரித்து வருகின்றனர்.