ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் மாணவர் மன்றம் துவக்கம்
திருப்பூர்; திருப்பூர், அம்மாபாளையம் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது. மாணவியர் தலைவி சஷ்டிகா வரவேற்றார். பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், மாணவர் மன்ற பிரதிநிதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து, அறிவுரை வழங்கினார். துணை முதல்வர் பிரேமலதா முன்னிலை வகித்தார். விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி மன்ற பொறுப்பாளர்களும் பதவியேற்றனர். மாணவர் தலைவர் சுஷாந்தன் நன்றி கூறினார்.