உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவிக்கு கல்வி உதவித்தொகை; எஸ்.டி., எக்ஸ்போர்ட் வழங்கல்

மாணவிக்கு கல்வி உதவித்தொகை; எஸ்.டி., எக்ஸ்போர்ட் வழங்கல்

திருப்பூர்; திருப்பூர், ஜெய் சாரதா பள்ளியின் முன்னாள் மாணவிக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, தலைமை வகித்தார். எஸ்.டி., எக்ஸ்போர்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிதி, பங்கேற்றார். இந்நிறுவன உரிமையாளர் திருக்குமரன், பள்ளியில் கடந்த வாரம் நடந்த விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்த நிலையில், விபத்தில் பெற்றோரை இழந்த ஸ்ரீவைஷ்ணவி குறித்து அறிந்து, வேதனையடைந்தார்.எனவே, சம்பந்தப்பட்ட மாணவியின் உயர் கல்விக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார். அதனடிப்படையில், பள்ளி தாளாளர், அறக்கட்டளை செயலாளர், முதல்வர் ஆகியோர் முன்னிலையில், மாணவிக்கு, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை