உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவேகானந்தா அகாடமி பள்ளியில் மாணவர் திறன் வளர்ப்பு பயிற்சி

விவேகானந்தா அகாடமி பள்ளியில் மாணவர் திறன் வளர்ப்பு பயிற்சி

திருப்பூர்;காங்கயம் அடுத்த காடையூரில் உள்ள விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு வணிகத்துறை மாணவ, மாணவிகள் 'இவென்சுரஸ்' என்ற தலைப்பில் பிற மாணவர்களுக்காக மொழித்திறன், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, தொழில்முனைவுத்திறன், வாழ்க்கைத்திறன் போன்ற திறன் வளர்ப்பு பயிற்சிகளை நடத்தினர். தொடர்ந்து 4வது ஆண்டாக மாணவர்களால் மாணவர்களுக்காக இந்த திறன் வளர்க்கும் பயிற்சி நடந்தது. இதை நடத்திய மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத் தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் பத்மநாபன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ