மேலும் செய்திகள்
குறுவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்
11-Jul-2025
திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டியில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி மாணவியர் அசத்தினர்.திருப்பூர், காலேஜ் ரோடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்ளரங்கில் வடக்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தலைமை வகித்தார்; மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் போட்டிகளை துவக்கி வைத்தனர்.குறுமைய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ஜெரால்டு ஒருங்கிணைத்தனர். நடுவர்களாக ஜெயகண்ணன், நதியா, ராஜா, இளவரசன், செல்லத்துரை செயல்பட்டனர். டேபிள் டென்னிஸ்
மாணவியர் தனிநபர் 14 வயது பிரிவில் கொங்கு மெட்ரிக் பள்ளி முதலிடம், 17 மற்றும் 19 வயது பிரிவில் ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி முதலிடம், பதினான்கு வயது பிரிவில் ஸ்ரீ சாய் மெட்ரிக், 17 மற்றும் 19 வயது பிரிவில் முறையே கொங்கு மெட்ரிக், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. மாணவியர் இரட்டையர், 14 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி, 17 வயது பிரிவில், கொங்கு மெட்ரிக், 19 வயது பிரிவில் ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி முதலிடம்; 14 மற்றும், 17 வயது பிரிவில் ஸ்ரீ சாய் மெட்ரிக் இரண்டாமிடம், 19 வயது பிரிவில் ஜெய்வாபாய் பள்ளி, 2 வது இடம். பால்பேட்மின்டன்
பால்பேட்மிட்டன், 14 வயது பிரிவில், பூலுவப்பட்டி ஜெய்சாராதா பள்ளி முதலிடம், கொங்கு மெட்ரிக் இரண்டாவது இடம். 17, 19 வயது பிரிவில் ஜெய்வாபாய் முதலிடம்; 17 வயது பிரிவில் கொங்கு மெட்ரிக் பள்ளி, 19 வயது பிரிவில் பூலுவப்பட்டி ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம். ஹாக்கி போட்டி
மாணவியர் ஹாக்கி, 14 மற்றும் 17 வயது இரண்டு பிரிவிலும், ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடம்; ஏ.பி.எஸ்., அகாடமி, இரண்டாமிடம். 19 வயது பிரிவில் ஏ.பி.எஸ்., முதலிடம்; ஜெய்வாபாய் இரண்டாமிடம். மாணவர் ஹாக்கி போட்டியில், 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவிலும், பூலுவப்பட்டி ஜெய்சாரதா பள்ளி முதலிடம், ஏ.பி.எஸ்., அகாடமி பள்ளி இரண்டாமிடம். கூடைப்பந்து
பதினான்கு வயது பிரிவில், ஜெய்வாபாய் அணி முதலிடம், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி இரண்டாமிடம். 17 வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடம், ஜெய்வாபாய் பள்ளி இரண்டாமிடம். 19 வயது பிரிவில், பூலுவப்பட்டி ஜெய்சாரதா பள்ளி முதலிடம், கே.ஜி.எஸ்., மெட்ரிக் இரண்டாமிடம்.
11-Jul-2025