திறனறிவு போட்டியில் மாணவர்கள் அபாரம்
திருப்பூர்; திறனறிவு போட்டியில் வெற்றி பெற்ற மங்கலம் கதிரவன் பள்ளி மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.கோவை, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில் நடத்தப்பட்ட திறனறிவு தேர்வில், மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் மதிப்பெண் பெற்ற, 8 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் மூன்று இடம் பெற்ற வர்ஷினி, ராணியா, கீர்த்திஸ்ரீ ஆகியோருக்கு, ரொக்கப் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்கள் தனுஸ்ரீ, பரத்வாசன், நந்தினி, பிரதீபா, அஜய்குமார் ஆகியோருக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஸ்ரீ சரண்யா ராஜ்குமார், பள்ளி முதல்வர் காந்தி பிரியதர்ஷினி ஆகியோர் பாராட்டினர்.