மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான கேரம்; அரசு பள்ளிகள் அசத்தல்
11-Oct-2025
-- நமது நிருபர் -திருப்பூர் மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டி, பள்ளி கல்வித்துறை சார்பில், காங்கயம் ரோடு, வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி செயலாளர் நகுலன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற, 64 பேர் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒற்றையர் 14 வயதினர் பிரிவில், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி அணி, இரட்டையர் பிரிவில் அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி அணி; ஒற்றையர் 17 வயதினர் பிரிவில், வித்யவிகாஷினி பள்ளி, இரட்டையர் பிரிவில், காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, ஒற்றையர் 19 வயதினர் பிரிவில், வித்யவிகாஷினி பள்ளி, இரட்டையர் பிரிவில் அய்யங்காளிபாளையம் பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றன.
11-Oct-2025