உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி எதிரில் கழிவுநீர் குளம்; நோய்களின் பிடியில் மாணவர்கள்

பள்ளி எதிரில் கழிவுநீர் குளம்; நோய்களின் பிடியில் மாணவர்கள்

அவிநாசி; அவிநாசி தாலுகா, வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிக்கவுண்டன்புதுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் எதிரில் ஊரக கட்டட பராமரிப்பு திட்டத்தின் கீழ், 2011 -12 ல் சுகாதாரக்கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது, பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் புதர் மண்டிக்கிடக்கிறது.அதன் அருகிலேயே 2016 - -17ல் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த பொது சுகாதார கழிப்பிடத்தை அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக இதற்குரிய செப்டிக் டேங்க் சுத்தம் செய்யப்படாததால், அருகிலேயே குட்டை போல கழிவுகள் தேங்கியுள்ளன. மாணவர்களுக்கு நோய் பரவுகிறது.பள்ளிக்கு அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. துர்நாற்றத்தால் மாணவர்கள் சாப்பிடக்கூட முடிவதில்லை.காசிக்கவுண்டன் புதுார் ஏ.டி., காலனியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணிகள் முழுமை பெறாததால் கழிப்பிடம் முன்பு, குட்டை போல தேங்கியுள்ளது. குடியிருப்புவாசிகள் சுகாதார சீர்கேட்டால் இன்னலுக்கு ஆளாகின்றனர்.கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால், மாணவர்கள் மூச்சு திணறல், சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையர், வேலாயுதம்பாளையம் ஊராட்சி செயலர், கலெக்டர், தலைமைச்செயலர், முதல்வர் என மனுக்கள் அனுப்பியும் பலனில்லை. இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ