உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புத்தக திருவிழாவில் மாணவர்கள் ஆர்வம்

புத்தக திருவிழாவில் மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர்; தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம்மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 21வது திருப்பூர் புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் மைதானத்தில் நடந்து வருகிறது.நேற்று, காலை முதல் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் புத்தக திருவிழாவில் பங்கேற்று, 150 அரங்குகளில் நிரம்பிக்கிடக்கும் புத்தகங்களை பார்வையிட்டனர்; வாசித்தனர். பலர் புத்தகங்களை வாங்கியும் சென்றனர்.சமீப நாட்களாக, உளவியல் மற்றும் பணவியல் தொடர்புடைய புத்தகங்களை படிப்பது, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. புத்தக திருவிழாவில், அதுதொடர்பான புத்தகங்களை வாசிப்பதிலும், வாங்குவதிலும் மக்களின் ஆர்வத்தை பார்க்க முடிந்தது. இக்கண்காட்சியில், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் பல்வேறு காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.தங்களது கைவினைப் பொருட்களை காட்சி மற்றும் விற்பனைக்கு வைத்திருந்தனர். சிறு தானிய உணவு பதார்த்தங்கள் மற்றும் சிறுதானிய உணவு பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை