பரட்டை முடி கூடாது; மாணவருக்கு தடை
அரசு பள்ளி மாணவ, மாணவியரை கல்வியாண்டு துவக்கம் முதலே ஒழுக்கமுடையவராக கொண்டு வர வேண்டும். கல்வித்துறை வழங்கும் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''இறுக்கமான, முக்கால் அளவுள்ள பேண்ட், இறுக்கமான சீருடைகளை மாணவர் அணியக்கூடாது. ஆடை துாய்மையானதாக இருக்க வேண்டும்; காலணி அணிவது அவசியம். தலையில் அதிக முடி வைக்காமல் 'ஸ்மார்ட் கட்டிங்' செய்ய வேண்டும். மாணவர்கள் கை, கழுத்தில் வண்ணக்கயிறுகளை அணிவது, ஜாதி அடையாளங்களை தெரியப்படுத்தும் விதமாக பனியன் அணிவது, பல வண்ணங்களில் பொட்டு வைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது. விடுப்பு தேவைப்பட்டால், பெற்றோர் மூலம் ஆசிரியரிடம் தெரிவித்து, விடுப்பு பெற வேண்டும். அவசர சூழ்நிலையால் விடுப்பு எடுத்தால், மறுநாள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து, விடுப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.