மேலும் செய்திகள்
அகத்தி பூ விற்பனையில் கூடுதல் வருவாய்
29-Sep-2025
உடுமலை: பருவமழை நன்றாக பெய்வதால், முதல் பட்டத்தில், கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உடுமலை ஏழு குள பாசன பகுதியில், கரும்பு பிரதான பயிராக இருந்தது. ஓராண்டு பயிராக இருப்பதால், இச்சாகுபடிக்கு நீர் வளம் உள்ள விளைநிலங்களே தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில், பள்ளபாளையம் சுற்றுப்பகுதியில், வெல்லம் உற்பத்திக்காக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், நவ., டிச., ஜன., மாதங்களில், முதல் பட்டமாகவும்; பிப்., மார்ச் மாதத்தில், நடுப்பட்டமாகவும், சாகுபடி செய்யப்படுகிறது. பழைய தொழில்நுட்பத்தின்படி, நடவுக்கு கரணையே பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருவதால், நடப்பு சீசனில், முதல் பட்டத்திலேயே, கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
29-Sep-2025