மேலும் செய்திகள்
கோடை உழவுக்கு ரூ.800 மானியம்
30-Apr-2025
உடுமலை; உடுமலை பகுதிகளில் கோடை மழை பெய்து வரும் நிலையில், மழை நீரை சேமிக்கும் வகையிலும், மண் வளத்தை பெருக்கும் வகையிலும், கோடை உழவு மேற்கொள்ள வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பெய்யும் மழையை வீணாக்காமல், கோடை உழவு செய்தால், மண் வளம் பெருகும்.அதோடு, மக்கிய தொழு உரம், 750 கிலோவுடன், சூப்பர் பாஸ்பேட் உரம், 2 மூட்டை மற்றும் வேளாண் துறையில், 50 சதவீதம் மானியத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவற்றை, 500 மில்லி வீதம் கலந்து மூடாக்கு போட்டு, நிழலில் வைத்து விட வேண்டும்.இக்கலவையை, பயிர் நடவுக்கு முன்பு, கடைசி உழவின் போது, நிலத்தில் இட்டு, உழவு செய்தால், சாகுபடியின் போது, மேலுரமாக டி.ஏ.பி., உரம் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் பயன்படுத்த வேண்டியதில்லை. மேலும், யூரியா மற்றும் பொட்டாஷ் உரம் போடுவதை, 25 சதவீதம் வரை குறைத்துக் கொள்ளலாம். எனவே இந்த சாகுபடி தொழில்நுட்பத்தை அனைத்து விவசாயிகளும் கடைபிடிக்க வேண்டும்.மேலும், கோடை உழவு செய்ததை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளவும். மாநில அரசு திட்டங்கள் வரும் போது, உழவர் செயலியின் முன்னுரிமை அடிப்படையில் திட்டம் வழங்கப்படும். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
30-Apr-2025