உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் புழு உரம் தயாரிக்க மானிய பொருள் வினியோகம்

மண் புழு உரம் தயாரிக்க மானிய பொருள் வினியோகம்

உடுமலை; மண் புழு உரம் தயாரிக்க தேவையான பொருட்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ள குடிமங்கலம் வட்டார வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்', திட்டத்தின் கீழ் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா கூறியிருப்பதாவது: ரசாயன பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி தொடர் பயன்பாடு காரணமாக, மண் வளம் குறைந்து வருகிறது.ரசாயன மருந்துகள் மற்றும் உரங்கள் பயன்பாட்டை குறைத்து, மண் வளத்தை மீட்டெடுக்க, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்,' திட்டத்தின் கீழ், மண் புழு உரம் தயாரித்தல், வேப்பங்கன்று வினியோகம், நொச்சி மற்றும் ஆடாதொடா கன்று வினியோகம், மண் மாதிரி எடுத்து மண் வளத்தை அறிதல், உயிர்ம இடுபொருட்கள் தயாரிப்பு குழு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில், மண் புழு உரம் தயாரித்து விவசாயிகளே பயன்படுத்தும் வகையில், 'சில்பாலின்' மண்புழு உரப்படுக்கை; தேவையான குச்சிகள் அடங்கிய மண் புழு உரப்படுக்கை அலகு 27 ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மண்புழு உரம் தயாரித்து பயன்படுத்த ஆர்வமுள்ள விவசாயிகள் மானிய விலையில், பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை