உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கண்காணிப்பு கேமரா அவசியம்

 கண்காணிப்பு கேமரா அவசியம்

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர். உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல, தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். மேலும், இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு, முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கவும், முன்பதிவு செய்யவும், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். எனவே, இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை