கண்காணிப்பு கேமரா தேவை
உடுமலை, ; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இதன் வழியாக, தினமும் நான்கு ரயில்கள் சென்று செல்கின்றன. பல்வேறு நகரங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான பயணியர் உடுமலை வருகின்றனர்.ஆனால், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அங்கு வருவோரை கண்காணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.