உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக அணி இரண்டாமிடம்

தேசிய கூடைப்பந்து போட்டி தமிழக அணி இரண்டாமிடம்

திருப்பூர், : தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்ற தமிழக கூடைப்பந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.சட்டீஸ்கர் மாநிலம், ராஜ்நந்தகவுன் பகுதியில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 17 வயது பிரிவினருக்கு தேசிய கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக அணி காலிறுதி போட்டியில், பஞ்சாப் அணியை, 80 - 88 என்ற புள்ளி கணக்கில், அரையிறுதி போட்டியில் டில்லி அணியை, 68 - 58 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இறுதி போட்டியில், சட்டீஸ்கர் அணியுடன் மோதியது.அடுத்தடுத்த புள்ளிகளை பெற்ற தமிழக அணிக்கு, தக்க தடுப்பு ஆட்டம் ஆடிய சட்டீஸ்கர் அணி, 49 - 37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி இரண்டாமிடம் பெற்றது.திருப்பூர் மாவட்டம், உடுமலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயபாண்டி, கடத்துார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேவராஜ், அணியை வழிநடத்தினர். மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன மற்றும் கூடைப்பந்து ஆர்வலர்கள் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை