தமிழ்ப்புத்தாண்டு திருநாள் ஹிந்து முன்னணி வாழ்த்து
திருப்பூர், : தமிழக மக்களுக்கு 'விசுவாவசு' தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: வானியல் அறிவியலை கொண்டு சூரியனின் சுற்று வட்டப் பாதை அடிப்படையில் சித்திரை 1ம் தேதி அன்று தமிழகம், கேரளா, அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் புத்தாண்டு துவக்கம் கொண்டாடப்படுகிறது.வசந்த காலமாகிய புத்தாண்டு, காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருவதை தமிழ் இலக்கியங்களில் பார்க்கிறோம். அத்தகைய நன்னாளில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று நலமுடன் வாழ ஹிந்து முன்னணி சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.