விடுமுறை தினங்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்
உடுமலை; நகராட்சி வரி வசூல் மையம், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றை உரிய காலக்கெடுவிற்குள் நகராட்சி வரி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும்.பொதுமக்கள் வரி செலுத்த வசதியாக, வரி வசூல் மையம், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் செயல்படும் என நகராட்சி கமிஷனர் சரவண குமார் தெரிவித்துள்ளார்.