உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் மீது டிராக்டர் மோதல் ஆசிரியை - மாணவி பலி

டூவீலர் மீது டிராக்டர் மோதல் ஆசிரியை - மாணவி பலி

திருப்பூர் : திருப்பூர் அருகே வெள்ளகோவிலில், டூவீலர் மீது டிராக்டர் மோதிய விபத்தில், ஆசிரியை மற்றும் அரசு பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தனர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், இந்திரா நகரை சேர்ந்தவர் சரஸ்வதி, 50; அகலரப்பாளையம் புதுார் அரசு துவக்கபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை ஆசிரியரின் வீட்டுக்கு அருகே தனது தாத்தா வீட்டுக்கு வந்திருந்த அதே பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் ராகவி, 10 மற்றும், 3ம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரி யாழினி, 8 ஆகிய, இருவரையும் பள்ளிக்கு ஆசிரியை டூவீலரில் அழைத்து கொண்டு சென்றார். சொரியங்கிணத்துப்பாளையம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ஆசிரியை சரஸ்வதி, மாணவி ராகவி ஆகியோர் பலத்த காயங்களுடன் பரிதாபமாக அதேயிடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த யாழினியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து டிராக்டரை ஓட்டி வந்த அஜீத்குமார், 27 என்பவரை கைது செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில், ஆசிரியை, மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் நிவாரண உதவி: திருப்பூரில் சாலை விபத்தில் பலியான அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.விபத்தில் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாழினிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ