மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
22-Jan-2025
திருப்பூர்; மாநகராட்சி பள்ளியில் வகுப்பறையில் அநாகரீகமாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 'சஸ்பெண்ட்' செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.திருப்பூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், ஏழாம் வகுப்பு கணித ஆசிரியர் சுந்தரவடிவேல், 52 என்பவர், வகுப்பறையில் மாணவியர் சிலர் மத்தியில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆசிரியரை 'போக்சோ'வில் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆசிரியரை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் நேற்று உத்தரவிட்டார்.
22-Jan-2025