உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் திருப்பணி துவக்கம் பழமை மாறாமல் புதுப்பிப்பு

கோவில் திருப்பணி துவக்கம் பழமை மாறாமல் புதுப்பிப்பு

திருப்பூர் : அவிநாசி அடுத்த நடுவச்சேரியில் நுாற்றாண்டுக்கு மேல் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நீண்ட காலமாக உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் கோவில் பாழடைந்து அதன் கட்டுமானங்கள் சிதிலமடைந்து வந்தன. 'தினமலர்' நாளிதழில் சுட்டிக் காட்டி செய்தி வெளியானது.இதையடுத்து, அறநிலையத்துறை சார்பில், கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பழமையானது என்பதால், தொல்பொருள் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொல்பொருள் துறையினர் பார்வையிட்டு, இதற்கான கருத்துருவை அளித்தனர். இது மண்டல குழு மூலம் பரிந்துரைத்து, மாநில குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த இரண்டாண்டாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை அடுத்து, கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி துவங்கியது. தொல்பொருள் துறையினர் இதை பார்வையிட்டு, கோவில் கட்டுமானத்தில் உள்ள கற்களை எண் குறிப்பிட்டு அடையாளப்படுத்தினர். கோவில் புனரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில்இப்பணி நிறைவுற்று கோவில் புதுப்பொலிவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை