உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டென்னிஸ் போட்டி; பிளாட்டோஸ் பிரமாதம்

டென்னிஸ் போட்டி; பிளாட்டோஸ் பிரமாதம்

திருப்பூர்; கோவை கே.ஜி.ஆர்., கல்லுாரியில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் டென்னிஸ் போட்டிகள், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பள்ளிகள் இடையே நடந்தன. இதில் பங்கேற்ற பிளாட்டோஸ் பள்ளி மாணவர்கள், மாநில போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மண்டல அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவியர் ஒற்றையர் பிரிவில் மோகித ஸ்ரீ, பிரித்திவிகா; 17 வயதுக்குட்பட்டோர் மாணவர் ஒற்றையர் பிரிவில் பிரணவ், பிரனேஷ், அஸ்வின்குமார் ஆகியோர் வெற்றிபெற்று, மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களையும், பயிற்சியாளர்கள் சந்தோஷ், சுரேஷ், சரண்யா ஆகியோரையும் பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், முதல்வர் ஸ்ரீகுமாரி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை