உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; திருத்தொண்டர் அறக்கட்டளை கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; திருத்தொண்டர் அறக்கட்டளை கண்டனம்

திருப்பூர்; திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை:ஜம்மு - காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அங்கு தேவைப்படுவது மக்களாட்சி அல்ல; ஜனாதிபதி ஆட்சி தான் என்பதை, பஹல்காமில் நடந்த அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. ஹிந்து என்று தெரிந்தவுடன், குடும்பத்தினர்கள் கண்முன்னே ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.பஹல்காம், ஹிந்துக்களின் புனித அமர்நாத் யாத்திரையில் முக்கிய இடமாகும். இன்னும் சில மாதங்களில் அமர்நாத் யாத்திரை துவங்க இருக்கிறது. அதற்கு முன்பே ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து, முழுக்க இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைப்பது தான் மத்திய அரசு ஹிந்துக்களுக்கு செய்யும் சிறந்த நன்மையாக இருக்க முடியும். தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். உயிரிழந்தவர்களின் ஆன்மா ஈசன் பாதத்தில் இளைப்பாறவும், படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெறவும், மனதார பிரார்த்திக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !