உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாட்கோ வளாகம் ரூ.25 கோடியில் மேம்பாடு

தாட்கோ வளாகம் ரூ.25 கோடியில் மேம்பாடு

திருப்பூர்; திருப்பூர் அருகே முதலிபாளையத்திலுள்ள 'தாட்கோ' தொழிற்பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை, 'தாட்கோ' இயக்குனர் கந்த சாமி நேற்று ஆய்வு செய் தார். தொடர்ந்து, தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருடன் கலந்துரையாடிய பின் தாட்கோ இயக்குனர் கந்தசாமி கூறியதாவது:முதலிபாளையம் 'தாட்கோ' தொழிற்பேட்டையில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 140 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில், 3,200 மீ., க்கு புதிய தார் சாலை, 5 ஆழ்துளை கிணறு, 50 தெருவிளக்குகள், 3000 மீ., க்கு புதிய சுற்றுச்சுவர் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோர், தாட்கோ சார்ந்த திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், புதிய நிர்வாக அலுவலகமும் கட்டப்படுகிறது. தொழில் முனைவோரின் தேவைக்கு ஏற்ப, குறுகிய அல்லது நீண்டகால குத்தகை மற்றும் வாடகைக்கு தொழிற் கூட கட்டடங்கள் வழங்கப்படும்.இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழகம் முழு வதும் அனைத்து பகுதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரும், முதலி பாளையம் தாட்கோ வளாகத்தில் தொழிற் கூடங்களை பெற விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், தாட்கோ செயற்பொறியாளர் (கோவை கோட்டம்) சரஸ்வதி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், திருப்பூர் தெற்கு தாசில்தார் சரவணன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.250 மனுக்கள்ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 250 மனுக்களை 'தாட்கோ' இயக்குனரிடம் வழங்கினர். 'மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்படும்' என, உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை