உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுரையில் அசத்தியவர்கள்

கட்டுரையில் அசத்தியவர்கள்

திருப்பூர் மாவட்ட போலீசார் சார்பில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு கூடுதல்எஸ்.பி., (தலைமையிடம்) ராஜேந்திரன் தலைமையில், ஐந்து சப்-டிவிஷன்களில் உள்ள கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 'தேசக்கட்டுமானத்தில் காவலர்களின் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் தாராபுரம் அரசு கல்லுாரி ெஷரீன் முதலிடம், அவிநாசி அரசு கல்லுாரி தரணிதரன் இரண்டாமிடம் மற்றும் தாரணி மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற, மூன்று மாணவ, மாணவியருக்கு திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை